/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொங்கு மண்டல விதைகள்; பாரம்பரிய உணவு திருவிழா
/
கொங்கு மண்டல விதைகள்; பாரம்பரிய உணவு திருவிழா
ADDED : ஜூலை 25, 2025 11:35 PM
திருப்பூர்; இரண்டாம் ஆண்டு, 'கொங்கு மண்டல விதைகள் மற்றும் உணவு திருவிழா', பல்லடத்தில் இன்று துவங்குகிறது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம், வனத்துக்குள் திருப்பூர் - வெற்றி அமைப்பு, வனம் இந்தியா பவுண்டேஷன் சார்பில், கொங்கு மண்டல விதைகள் மற்றும் உணவு திருவிழா, பல்லடம் ரோடு, அருள்புரம், டி.ஆர்.ஜி., திருமண மண்டபத்தில், இன்றும், நாளையும் நடக்கிறது.
பாரம்பரிய கலை நிகழ்ச்சி, இயற்கை வேளாண்மை விற்பனையகங்கள் மற்றும் கண்காட்சிகள், இயற்கை உணவகங்கள், சிறப்பு விவாத மேடைகள், இளைய தலைமுறை மற்றும் மூத்த முன்னோடிகளின் சிறப்புரைகளும், இவ்விழா நடக்க உள்ளது.
திருப்பூர் மாவட்ட அளவிலான, தன்னார்வ அமைப்புகள், பள்ளி மற்றும் கல்லுாரிகளும் இவ்விழாவில் கரம் கோர்த்துள்ளன. இன்று, இயற்கை வேளாண்மை, பாரம்பரிய மருத்துவம், நலம் தரும் நல்லசோறு, வனம் போற்றுவோம், நவீன வழியில் இயற்கை வேளாண்மை, மரபு விதைகளின் மகத்துவம், பெண்கள் கையில் இயற்கை வேளாண்மை, மாற்று எரிசக்தியும் மதிப்புறு வாழ்வியலும் என்ற தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவு, விவாதமேடைகள் நடக்கும்.
கண்காட்சி அரங்குகள், உணவு கூடங்கள், விற்பனை அரங்குகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். இரண்டு நாட்களும், காலை, 9:00 முதல், இரவு, 7:00 மணிவரை கண்காட்சி நடக்குமென, ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.