/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொங்கு நாடு விவசாயிகள் கட்சி வேளாண் பட்ஜெட்டுக்கு வரவேற்பு
/
கொங்கு நாடு விவசாயிகள் கட்சி வேளாண் பட்ஜெட்டுக்கு வரவேற்பு
கொங்கு நாடு விவசாயிகள் கட்சி வேளாண் பட்ஜெட்டுக்கு வரவேற்பு
கொங்கு நாடு விவசாயிகள் கட்சி வேளாண் பட்ஜெட்டுக்கு வரவேற்பு
ADDED : மார் 17, 2025 01:40 AM

திருப்பூர்; தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து கொங்கு நாடு விவசாயிகள் கட்சி மாநில தலைவர் முருகேசன், பொதுச்செயலாளர் ராஜாமணி ஆகியோர் கூறியதாவது:
தமிழகத்தின் மாநில மரமான பனையைக் காப்பது நம் தலையாய கடமை; இதற்கு வலுசேர்க்கும் விதமாக பனை மர எண்ணிக்கையை அதிகரிக்க பனை மேம்பாட்டு இயக்கம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், அதற்கு 1.65 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது வருத்தம் அளிக்கிறது.
மக்காச்சோளம், கரும்பு உற்பத்தியில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது; கால்நடைத் தீவனம், எத்தனால் உற்பத்திக்கு உகந்த மக்காச்சோளம் சாகுபடி மூலம், மக்காச்சோளம் உற்பத்தி மேம்பாட்டு திட்டம், 79 ஆயிரம் உழவர்கள் பயன் அடையும் வகையில், 40 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. சிறுதானிய பயிர்களின் பரப்பு உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழக சிறுதானிய இயக்கம், மண்வளம் மேம்படுத்திட முதல்வரின் 'மண்ணுயிர் காப்போம்' திட்டம், விவசாயிகளுக்கான விபத்து மரண இழப்பீடு 2 லட்சம் ரூபாயாக உயர்வு போன்ற திட்டங்கள் நல்ல வரவேற்பை பெறும்.