/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிருஷ்ண ஜெயந்தி விழா 16ல் துவக்கம்
/
கிருஷ்ண ஜெயந்தி விழா 16ல் துவக்கம்
ADDED : ஆக 07, 2025 09:14 PM
- நிருபர் குழு -
உடுமலை நவநீத கிருஷ்ணசுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவ விழா வரும் 16ம் தேதி துவங்குகிறது.
உடுமலை பெரியகடை வீதி நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், பூமீநீளா நாயகி சமேத சீனிவாச பெருமாள் சுவாமிகளுக்கு கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜை நடக்கிறது.
கிருஷ்ண ஜெயந்தி விழா 16ம் தேதி முதல் 25ம் த ே தி வரை நடக்கிறது. நாள்தோறும் மாலை, 3:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது.முதல் நாள் கண்ணன் பிறந்தநாளும், ஒவ்வொரு நாளும் தவழும் கண்ணன், வெண்ணை தாழிக்கண்ணன், பால சோர கண்ணன், ஸ்ரீ வித்யா ராஜகோபாலன், கோவர்தன கிரிதாரி கண்ணன் உள்ளிட்ட சிறப்பு அலங்காரங்களுடன் சிறப்பு சேவை நடக்கிறது.
வரும் 22ம் தேதி உறியடி உற்சவம், காளிங்கநர்த்தன கண்ணன், விஸ்வரூபம், நிறைவு நாளில் ஆண்டாள் ரங்கமன்னார் சேர்த்தி சேவை நடக்கிறது.
* ஆனைமலை, மஞ்சநாயக்கனுார் அருகே ஜல்லிபட்டி நந்தகோபால்சுவாமி மலை கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் உறியடி உற்சவ திருவிழா வரும், 16ம் தேதி துவங்குகிறது.
விழாவை முன்னிட்டு, 16ம் தேதி காலை, 7:00 மணிக்கு சுதர்சன ேஹாமம், காலை, 9:00 மணிக்கு அபிேஷகம், 108 சங்காபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கின்றன. அதன்பின், நந்தகோபால்சுவாமி பஜனைக்குழுவினரின் பக்தி பஜனை பாடல்கள், காந்தி கலைக்குழுவினரின் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி நடக்கிறது.
மதியம், 12:00 மணிக்கு மேல், மாலை, 4:00 மணிக்குள் கிருஷ்ண ஜெயந்தி வளைகாப்பு சீர், கோபிகா நந்தன், கண்ணன் பிறப்பு, சொற்பொழிவு, இரவு, 7:00 மணிக்கு கோவில் மலை அடிவாரத்தில் பஜனை பாடல்கள் நடக்கின்றன.
வரும், 17ல் காலை, 7:00 மணிக்கு மேல் பகல், 11:00 மணிக்குள் உறியடி உற்சவம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து, பஜனை நிகழ்ச்சி நடக்கிறது. இரண்டு நாட்களும் அன்னதானம் வழங்கப்படுகிறது.