/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கபடியில் கலக்கிய கே.எஸ்.சி., பள்ளி
/
கபடியில் கலக்கிய கே.எஸ்.சி., பள்ளி
ADDED : ஆக 10, 2025 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான கபடி போட்டி, முதலிபாளையம் நிப்ட் - டீ கல்லுாரி மைதானத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக பொருளாளர் ஜெயசித்ரா சண்முகம், நிப்ட்-டீ கல்லுாரி நிர்வாக ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, நிர்வாக அலுவலர் மகேஷ்குமார் ஆகியோர் துவக்கிவைத்தனர்.
14 வயதுக்கு உட்பட்ட மாணவர் கபடியில், கே.எஸ்.சி., பள்ளி முதலிடம்; சர்க்கார் பெரியபாளையம் அரசு பள்ளி இரண்டாமிடம் பிடித்தன. 17 வயது பிரிவு போட்டியில், கே.எஸ்.சி., பள்ளி முதலிடம்; வீரபாண்டி அரசு பள்ளி இரண்டாமிடம் பிடித்தன. 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், கே.எஸ்.சி., பள்ளி முதலிடம்; விஜயாபுரம் அரசு பள்ளி இரண்டாமிடம் பிடித்தன.