/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் வழியாக கூடலுார் - திருச்சி பஸ்
/
திருப்பூர் வழியாக கூடலுார் - திருச்சி பஸ்
ADDED : மார் 03, 2024 11:35 PM
திருப்பூர்;பயணிகள் வசதிக்காக, திருச்சி - கூடலுாரை இணைக்கும் வகையில், புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.
பயணிகள் கோரிக்கையை ஏற்று, புதிய வழித்தடங்களுக்கு, 200 புதிய பஸ்கள் இயக்கம்சமீபத்தில் சென்னையில் துவக்கி வைக்கப்பட்டது. அதில், திருப்பூர் மண்டலம் வழியாககூடலுார் - திருச்சி பஸ் பயணிக்கிறது.
கூடலுாரில் காலை, 9:45 மணிக்கு புறப்படும் பஸ் (டி.என்., 43 என் 0966) ஊட்டி, குன்னுார், மேட்டுப்பாளையம், அவிநாசி வழியாக பயணித்து, மாலை, 4:00க்கு திருப்பூர் வருகிறது. இங்கிருந்து காங்கயம், கரூர் வழியாக இரவு, 8:30க்கு திருச்சி சென்று சேர்கிறது.
இதே வழித்தடத்தில் மாலை, 5:30 கூடலுாரில் புறப்படும் மற்றொரு பஸ், இரவு, 11:00 மணிக்கு திருப்பூர் வருகிறது; அதிகாலை, 3:30க்கு திருச்சி சென்று சேருகிறது.
மறுமார்க்கமாக, திருச்சியில் இருந்து அதிகாலை, 5:20க்கு கூடலுாருக்கு புறப்படும் பஸ், 9:45க்கு திருப்பூர் வருகிறது; மாலை, 3:35க்கு கூடலுார் செல்கிறது. மற்றொரு பஸ், இரவு, 10:00 மணிக்கு திருச்சியில் புறப்பட்டு, மறுநாள் காலை, 8:35க்கு கூடலுார் சென்று சேர்கிறது; திருப்பூருக்கு அதிகாலை, 2:30க்கு வருகிறது.
'இந்த பஸ்கள், திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் வந்து, பயணிகளை அழைத்து செல்லும். இந்த பஸ்சில் பயணிக்க விரும்புவோர் முன்பதிவு செய்தும் கொள்ளலாம்,' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

