/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குற்றத்தடுப்பு பணி விழிப்புணர்வு குடிமங்கலம் போலீசார் தீவிரம்
/
குற்றத்தடுப்பு பணி விழிப்புணர்வு குடிமங்கலம் போலீசார் தீவிரம்
குற்றத்தடுப்பு பணி விழிப்புணர்வு குடிமங்கலம் போலீசார் தீவிரம்
குற்றத்தடுப்பு பணி விழிப்புணர்வு குடிமங்கலம் போலீசார் தீவிரம்
ADDED : மே 15, 2025 11:20 PM

உடுமலை, ;குடிமங்கலம் போலீசார் சார்பில், பெதப்பம்பட்டி நால்ரோட்டில், குற்றத்தடுப்பு விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டது.
கிராமங்களிலும், தோட்டத்து சாளைகளிலும் நடைபெறும் குற்றங்களை தவிர்க்க, பல்வேறு விழிப்புணர்வு பணிகள் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வகையில், குடிமங்கலம் போலீசார் சார்பில், பெதப்பம்பட்டி நால்ரோட்டில் மக்களிடையே குற்றத்தடுப்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சந்தேகத்துக்குரிய நபர்களை கண்டறிதல், தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்தல், பெண்கள் பாதுகாப்பும் குறித்து மக்களிடையே தெரிவிக்கப்பட்டது. மேலும், சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டது.
குடிமங்கலம் எஸ்.எஸ்.ஐ., விஸ்வநாதன் மற்றும் போலீசார், இந்த விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்.