ADDED : பிப் 22, 2024 05:40 AM

நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், மதுரை, திருமங்கலம், அன்னை பாத்திமா கல்லுாரியில் பிப்., 21 முதல், 23 வரை பேரிடர் மற்றும் முதலுதவி விழிப்புணர்வு பயிலரங்கம் நடக்கிறது. இதில் மாநிலம் முழுதும் இருந்து, 150 கல்லுாரி மாணவர்களும், கோவை பாரதியார் பல்கலையில் இருந்து, ஏழு பேரும் பங்கேற்கின்றனர். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, கணினி பயன்பாட்டியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி, லோகநாயகி மதுரை பயிலரங்கத்துக்கு செல்கிறார்.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து இப்பயிலரங்களில் பங்கேற்க உள்ள ஒரே அரசு கல்லுாரி மாணவி இவர்தான். சிக்கண்ணா கல்லுாரி நிர்வாகம் சார்பில் இவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், என்.எஸ்.எஸ்., அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் உள்ளிட்டோர் மாணவியை பாராட்டி வழியனுப்பி வைத்தனர்.