
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஈரோட்டில் நடந்த தென்னிந்திய ஓபன் கராத்தே போட்டியில், டைன்ட்ரீ பப்ளிக் பள்ளி எல்.கே.ஜி., மாணவர் திவிஷ்குமார் பங்கேற்றார். முதலிடம் பெற்று, கோப்பை வென்றார். இப்பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவர் ஹர்ஷன், கணியாம்பூண்டியில் நடந்த மாவட்ட சிலம்ப போட்டியில் பங்கேற்று, முதலிடம் பெற்று, கோப்பை வென்றார். வெற்றி பெற்ற இருவரை, பள்ளியின் தாளாளர் சூர்யஹரிஹரா சிவசுப்ரமணியம், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.