ADDED : டிச 14, 2024 11:38 PM

சென்னையை சேர்ந்த குகேஷ், உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்று, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இடைவிடாத முயற்சியும், பயிற்சியும் இருந்தால், திருப்பூர் போன்ற இடங்களில் இருந்தும் 'குகேஷ்'கள் உருவாக முடியும்.
திருப்பூர் மாவட்ட செஸ் அசோசியேஷன் செயலாளர் சிவன் பாலசுப்ரமணியன் கூறியதாவது:
செஸ் விளையாட்டில் சாதிக்க தனித்திறமை மிக அவசியம்.- அதீத நினைவுத்திறன் உள்ளவர்களே செஸ்சில் வெற்றி பெறுவதற்கான அடிப்படை தகுதி பெற்றவர்கள்.- ஆட்டக்காரர்கள் சிறந்த பயிற்சியாளரைத் தேர்வு செய்து, இடைவிடாத பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து ஆட்டங்களில் பங்கேற்க வேண்டும்.
அதிக போட்டிகளில் பங்கேற்பதும், வெற்றி பெறுவதும் சிறப்பு; அடுத்தடுத்த நிலைகளுக்கு முன்னேறி கொண்டே இருக்கலாம். குகேஷ் ஏராளமான போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று தான் இந்த நிலையை அடைந்துள்ளார். செஸ்சைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நகர்தலும் முக்கியம். பலமுறை யோசித்து, அதனால் போர்டில் மாறும் விளைவுகளையும் கணக்கிட்டுத்தான் நகர்தலை மேற்கொள்ள மடியும்.
ஒரு நொடி கவனம் சிதறி விட்டாலோ, ஒரு நகர்தல் நுால் இழையளவு தவறி விட்டாலோ ஆட்டத்தின் போக்கு மாறிவிடும்; ஆட்டத்தையே இழக்க நேரிடும். எதிரே யார் அமர்த்துள்ளார்கள் என்பதையெல்லாம் யோசிக்காமல் ஆட்டத்தை துவக்கத்திலே தன் போக்குக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.