/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று பட்டொளி வீச அன்று கொடி காத்த குமரன்: 121வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
/
இன்று பட்டொளி வீச அன்று கொடி காத்த குமரன்: 121வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
இன்று பட்டொளி வீச அன்று கொடி காத்த குமரன்: 121வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
இன்று பட்டொளி வீச அன்று கொடி காத்த குமரன்: 121வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
ADDED : அக் 04, 2024 11:50 PM

திருப்பூர் : சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன், 121வது பிறந்த நாள் முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, தடியடி பட்டு உயிர் தியாகம் செய்தவர் திருப்பூர் குமரன். கையில் ஏந்திய கொடியை கீழே விட மறுத்து கொடியைக் கையில் ஏந்தியவாறு உயிர் நீத்த காரணத்தால் கொடி காத்த குமரன் என்றழைக்கப்பட்டர் அவர்.
குமரன் 121வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் எதிரேயுள்ள குமரன் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் துாவியும் மரியாதை செலுத்தப்பட்டது.
n சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுகள் மற்றும் குடும்பத்தினர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
n திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் கட்சியினர் மரியாதை செலுத்தினர். மாநில பொது செயலாளர் முருகானந்தம், மாநில செயலாளர் மலர்க்கொடி, மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன், அருண்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
n அ.ம.மு.க., சார்பில், மாவட்ட செயலாளர் சண்முகவேல், மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி முன்னிலையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
n காங்., கட்சியினர், மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் மரியாதை செலுத்தினர். கோபால்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
n ஐ.ஜே.கே., சார்பில் மாவட்ட தலைவர் பாரி கணபதி தலைமையில் நகர மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
n தென்னிந்திய செங்குந்த மகா ஜன சங்கம் சார்பில் அதன் தலைவர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
n ஹிந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் மணிகண்டன், செய்தி தொடர்பாளர் ஹரிஹரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
n யுவசேனா சார்பில் மாநில தலைவர் திருமுருக தினேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
n நாம் தமிழர் கட்சி, செங்குந்தர் பேரவை, கிட்ஸ் கிளப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும், ஏராளமான பொதுமக்களும், குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.