/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீகரியகாளியம்மன் கோவிலில் 24ல் கும்பாபிேஷக பெருவிழா
/
ஸ்ரீகரியகாளியம்மன் கோவிலில் 24ல் கும்பாபிேஷக பெருவிழா
ஸ்ரீகரியகாளியம்மன் கோவிலில் 24ல் கும்பாபிேஷக பெருவிழா
ஸ்ரீகரியகாளியம்மன் கோவிலில் 24ல் கும்பாபிேஷக பெருவிழா
ADDED : ஜன 20, 2024 02:40 AM
திருப்பூர்;திருப்பூர் அருகே முதலிபாளையம் அமுக்கியம், மாணிக்காபுரம் புதுாரில் உள்ள, கரியகாளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா, 24ம் தேதி நடைபெறுகிறது.
பொருள்தந்த காணியாளர்கள் குலதெய்வமாகிய, கரியகாளியம்மன் கோவில், மாணிக்காபுரம் புதுாரில் அமைந்துள்ளது. கோவிலில், திருப்பணிகள் நிறைவுற்று கும்பாபிேஷக விழா, வரும் 22ம் தேதி, மகா கணபதி ேஹாமத்துடன் துவங்குகிறது. புண்யாகம், வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், கும்பஸ்தாபனம் போன்ற முறை வழிபாடுகளை தொடர்ந்து, யாகசாலை வேள்வி பூஜை துவங்குகிறது. வரும், 22ம் தேதி மாலை முதல்கால வேள்வி பூஜையும், அடுத்துவரும் நாட்களில், காலை, மாலை, யாக வேள்வி பூஜைகளும் நடக்க உள்ளன. வரும், 24 ம் தேதி காலை, 6:00 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜைகள் நிறைவு பெறுகின்றன.
தொடர்ந்து, காலை, 9:15 முதல், 10:15 மணிக்குள், விநாயகர், கரியகாளியம்மன் மற்றும் பரிவாரங்களுக்கு கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. அதன்பின், சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தசதானம், தசதரிசன பூஜைகளும் நடக்க உள்ளன. காலை, 10:00 மணி முதல், அன்னதானம் நடைபெறும். கும்பாபிேஷக ஏற்பாடுகளை, கோவில் தக்கார் சரவணபவன், செயல் அலுவலர் பவானி மற்றும் பொருள்தந்த குல காணியாளர்கள் மற்றும் கரியகாளியம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.