/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொன்காளியம்மன் கோவில் ஜூன் 9ல் கும்பாபிேஷகம்
/
பொன்காளியம்மன் கோவில் ஜூன் 9ல் கும்பாபிேஷகம்
ADDED : ஜன 12, 2024 12:25 AM

பல்லடம்;பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில், நுாற்றாண்டு பழமையான பொன்காளியம்மன் கோவில் உள்ளது.
ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவிலில், திருப்பணி துவங்கி நடந்து வருகிறது. நேற்று, கும்பாபிஷேகம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கோவிலில், நிறைவடையாத பணிகள், அணுக வேண்டிய முக்கிய பிரமுகர்கள், பணிகளைப் பிரித்து வழங்குவது, அழைப்பிதழ் அடிப்பது, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், வரும் ஜூன் மாதம் கும்பாபிஷேகம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கோவில் விழா குழுவினர் கூறுகையில், 'கோவில் திருப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதையடுத்து, ஜூன் 9 அன்று கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் தரப்பில் இது குறித்து ஆலோசித்த பின், தேதி உறுதி செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்,' என்றனர். கூட்டத்தில், பல்வேறு குலத்தை சேர்ந்த விழா குழுவினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.