/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் கும்பாபிேஷகம்
/
ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் கும்பாபிேஷகம்
ADDED : டிச 16, 2024 12:24 AM

திருப்பூர்; திருப்பூர், ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் மஹா கும்பாபிேஷகம் நேற்று கோலாகலமாக நடந்தது.
திருப்பூர், யுனிவர்சல் தியேட்டர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோவில் திருப்பணிகள் நிறைவுற்றன. புதிதாக, துவாரகமாயி துனி, தியான மண்டபம் ஆகியவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. திருப்பணி முடிந்து, நேற்று மஹா கும்பாபிேஷகம் விமரிசையாக நடந்தது.
கும்பாபிேஷக விழாவுக்கு, 5ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி பூஜையுடன், 13ம் தேதி கும்பாபிேஷக யாகசாலை பூஜைகள் துவங்கியது.
கணபதி ேஹாமத்துடன் முதல் கால வேள்வி பூஜைகள் துவங்கின.தினமும், வேதமந்திரங்கள் முழங்க, யாகசாலை பூஜைகள் விமரிசையாக நடந்தன. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, நான்காம் கால வேள்வி பூஜையும், நிறைவேள்வி பூஜையும் நடந்தன.
காலை, 6:15 மணி முதல், 6:30 மணிக்குள், பரிவாரங்கள், கோபுர கலசம் மற்றும் மூலாலய மூர்த்தி கள் சத்குரு சாய்நாதருக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. தசதானம், மகாதீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. அவிநாசி, வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், 101வது ஜெயந்தி விழாவையொட்டி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
மாலை, 6:00 மணிக்கு ஸ்ரீசாய் மகான் பல்லக்கு ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. காலை, 8:00 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீசீரடி சாய்பீட அறங்காவலர் குழு, சேவையாளர்கள் மற்றும் விழா கமிட்டி யினர் செய்திருந்தனர்.