/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதுரை வீரன் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்
/
மதுரை வீரன் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்
ADDED : பிப் 12, 2024 12:24 AM

உடுமலை:சின்னவாளவாடியில், ஸ்ரீ மதுரை வீரன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று கோலாகலமாக நடந்தது.
உடுமலை சின்னவாளவாடியில், ஸ்ரீ பட்டத்தரசி அம்மன், ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பொம்மியம்மாள், ஸ்ரீ வெள்ளையம்மாள், தன்னாட்சியப்பன், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ முனியப்பசாமி கோவிலில், மூலவர் கோபுரம், முன்மண்டபம் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கும்பாபிேஷக விழா, நேற்று முன்தினம் விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. தொடர்ந்து மகா கணபதி ேஹாமம், முதற்கால யாக சாலை பூஜை, சுவாமி சிலைகளுக்கு யந்திரம் வைத்தல், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை, 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை துவங்கியது. காலை 8:15 மணிக்கு மேல், 9:15 மணிக்குள் மகா கும்பாபிேஷகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.