/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீரகாளியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்
/
வீரகாளியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்
ADDED : ஜன 21, 2024 11:38 PM

உடுமலை;சின்னவீரம்பட்டியில், வீரகாளி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.
உடுமலை சின்னவீரம்பட்டியில், வீரகாளி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, கருவறை, விமான கோபுரம் அமைத்து, கும்பாபிேஷக விழா, கடந்த, 20ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.
ஸ்ரீ கணபதி, துர்கா, லட்சுமி, சரஸ்வதி, நவகிரக பூஜை மற்றும் ேஹாமங்கள் நடந்தது. நேற்று காலை, 7:30 மணிக்கு மேல், புண்யாகம், சூர்ய, கும்ப பூஜை, இரண்டாம் கால வேள்வி நடந்தது.
காலை, 9:51 மணிக்கு ஸ்துாபி கும்பாபிேஷகமும், காலை, 10:30 மணிக்குள், விநாயகர், வீரகாளி அம்மன், பாலசுப்பிரமணியர், குட்டைகாரன் சுவாமி, பரிவார தேவதைகளுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.