/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சேவூர் ஐயப்பன் கோவிலில் 20ம் தேதி கும்பாபிேஷகம்
/
சேவூர் ஐயப்பன் கோவிலில் 20ம் தேதி கும்பாபிேஷகம்
ADDED : நவ 04, 2024 10:44 PM
அவிநாசி; சேவூர் ஸ்ரீபாலசாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிேஷக விழா, 20 ம் தேதி நடைபெற உள்ளது.
சேவூரில் உள்ள ஸ்ரீபாலசாஸ்தா ஐயப்பன் கோவில், ஐயப்பன், ஸ்ரீகணபதி, சிவபெருமான், குருவாயூரப்பன், கன்னிமூல கணபதி, பாலமுருகன், மாளிகைபுரத்தம்மன், ஆஞ்சநோயர், நாக தேவைகள் சன்னதி ஆகியவற்றில் திருப்பணி நிறைவு பெற்றுள்ளது. தொடர்ந்து கும்பாபிேஷக விழா, 17ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் துவங்குகிறது. அன்றைய தினம், அங்காளம்மன் கோவிலில் இருந்து, காலை 9:00 மணிக்கு, தீர்க்குடம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.
வரும், 18ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 20ம் தேதி அதிகாலை, நான்காம் கால வேள்வி பூஜையும், அதிகாலை, 4:50 முதல், காலை, 5:15 மணி வரை மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது. காலை, 5:15 முதல், 5:40 மணிக்குள், மூலாலய மூலவர்கள் மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, சன்னிதானங்களின் அருளுரை, மகா அபிேஷகம், அலங்கார பூஜைகள், தசதரிசனம், தசதானம், கூட்டு வழிபாட்டுடன், அன்னதானமும் நடைபெற உள்ளது. இரவு, 8:45 மணிக்கு ஹரிவராசனம், 21ம் தேதி புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவீதியுலா நிகழ்ச்சி நடக்க உள்ளது.
கும்பாபிேஷக விழாவையொட்டி, 17ம் தேதி மாலை வள்ளிக்கும்மி நடனமும், 19ம் தேதி மாலை, 7:00 மணிக்கு, 'ஐயப்ப தத்துவம்' என்ற தலைப்பில், அரவிந்த் சுப்பிரமணியத்தின் ஆன்மிக சொற்பொழிவும் நடக்க உள்ளது.