/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஞான விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
/
ஞான விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
ADDED : ஜன 20, 2024 12:00 AM
உடுமலை:ஜல்லிபட்டி ஞான விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம் நடக்கிறது.
உடுமலை அருகே ஜல்லிபட்டி கங்கா லைட்சிட்டியில் ஸ்ரீ ஞான விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், அஷ்ட பந்தன மகா கும்பாபிேஷக விழா நடைபெறுகிறது.
இதில், இன்று காலை, 8:00 மணிக்கு திருமூர்த்திமலையில் தீர்த்தம் எடுத்து வருதலும், மாலை, 5:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, முதற்கால யாக வேள்வியும் நடக்கிறது.
இரவு, 9:30 மணிக்கு ஆலய விமான கலசம் வைத்தல் இடம் பெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நாளை (21ம் தேதி) காலை, 6:00 மணிமுதல் 7:30 மணிக்குள் ஆலய விமான கோபுர கலச மகா கும்பாபிேஷகமும், தொடர்ந்து அபிேஷக அலங்கார பூஜை, கோ பூஜை, தசதரிசனமும், காலை, 8:00 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.
இதில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.