/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவன்மலை கோவிலில் கும்பாபிேஷக ஆண்டு விழா
/
சிவன்மலை கோவிலில் கும்பாபிேஷக ஆண்டு விழா
ADDED : ஜூலை 02, 2025 11:56 PM
காங்கயம்; சிவன்மலை கோவிலில் கும்பாபிஷேகம் 11 ம் ஆண்டு விழா சிறப்பாக நடந்தது.
காங்கயம், சிவன்மலையில் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும், பக்தர்களின் கனவில் தோன்றும் பொருள் என்பது மிகவும் சிறப்பு.
கும்பாபிஷேக விழா கடந்த, 2014ம் ஆண்டு நடத்தப்பட்டு, தற்போது 11 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து நேற்று ஆண்டு விழா சிறப்பாக நடத்தப்பட்டது. இப்பூஜையில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, சுவாமி திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து தங்கரத புறப்பாடு நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிர்வாகமும், பக்தர்கள் செய்திருந்தனர்.