/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவிலில் நாளை மறுநாள் கும்பாபிேஷகம்
/
ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவிலில் நாளை மறுநாள் கும்பாபிேஷகம்
ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவிலில் நாளை மறுநாள் கும்பாபிேஷகம்
ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவிலில் நாளை மறுநாள் கும்பாபிேஷகம்
ADDED : டிச 12, 2024 11:59 PM

திருப்பூர்; திருப்பூர், ஸ்ரீசீரடி சாய்பாபா கோவில் கும்பாபிேஷகம் நாளை மறுநாள் நடக்கிறது.
திருப்பூர், வாலிபாளையம், யுனிவர்சல் தியேட்டர் சாலையில் உள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில், கும்பாபிேஷக விழா, கடந்த, 5ம் தேதி, முகூர்த்தக்கால் நடுதல் பூஜையுடன் துவங்கியது.
நேற்று, முளைப்பாலிகை, தீர்த்தக் குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு திருப்பூர் சாய்கிருஷ்ணா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ் குழுவினர் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
இன்று, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, கணபதி வேள்வி, நவக்கோள் வழிபாடு, திசைக்காவலர் வழிபாடு, பிரவேச பலி, பூர்ணாகுதி, தீபாராதனை நிகழ்வுகள் காலையிலும், முளைப்பாலிகை வழிபாடு, திருவருட் சக்திகளை திருக்குடங்களில் ஏற்றல், வேள்வி பூஜைகள் மாலையிலும் நடக்கிறது. இன்று நிறைவு நிகழ்ச்சியாக, ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி குழுவினரின் பஜன் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை (14ம் தேதி) கோபுர கலசம் வைத்தல், திருமேனி பிரதிஷ்டை, ஸ்ரீ சத்ய நாராயண பூஜை நடக்கிறது. மாலை முத்தமிழ் ராகங்கள் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 15ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜை துவங்குகிறது. காலை, 6:15 முதல், 6:30 க்குள் கும்பாபிேஷக விழா நடக்கிறது.
அவிநாசி, காமாட்சிதாச சுவாமி, ஆனைமலை, ஆர்ஷ வித்யா பீடம் தேவானந்த சரஸ்வதி சுவாமிகள் முன்னின்று கும்பாபிேஷக நிகழ்ச்சிகளை நடத்தி வைக்கின்றனர். காலை, 9:00 மணிக்கு அலங்கார பூஜை நடக்கிறது.
கும்பாபிேஷக நாளில், காலை, 8:00 மணி முதல் அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை ஸ்ரீ சீரடி சாய் பீட அறங்காவலர் குழு, சேவையாளர் மற்றும் விழாக்கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

