/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விநாயகர் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
/
விநாயகர் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
ADDED : ஆக 20, 2025 09:18 PM
உடுமலை; உடுமலை வினைதீர்க்கும் விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது.
உடுமலை வ.உ.சி., வீதியில் வினைதீர்க்கும் விநாயகர் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிேஷக விழா நேற்று துவங்கியது. நேற்று காலை, 9:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாகவாசனம், கணபதி ஆவாஹனம், நவகிரக வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு நடந்தது.
மாலையில் வாஸ்துசாந்தி, முதற்கால யாக பூஜை நடந்தது. இன்று அதிகாலையில் சிறப்பு பூஜை நடக்கிறது. காலை, 7:50 முதல் 9:00 மணிக்குள் வினைதீர்க்கும் விநாயகருக்கு கும்பாபி ேஷகம் நடக்கிறது. தொடர்ந்து மஹா அபிேஷகம், தீபாராதனை நடைபெறுகிறது.
பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

