/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
/
விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
ADDED : செப் 09, 2025 10:12 PM

உடுமலை; உடுமலை யு.கே.சி நகரில் கிணத்தடி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கும்பாபிேஷக விழா சிறப்பு பூஜைகள் நேற்று முன்தினம் முதல் துவங்கியது. முதல் நாள் விநாயகர் வழிபாட்டுடன் பூஜை நடந்தது.
தொடர்ந்து மகாலட்சுமி யாகம், நவக்கிரக யாகம் நடந்தது. இன்று காலையில் வாஸ்து சாந்தி, ரக்ேஷாகண ேஹாமம், ரக்சாபந்தனம், மகா பூர்ணாகுதி, நடக்கிறது.
மாலையில் முதற்கால யாகபூஜை நடக்கிறது. மாலையில் விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், கும்பஸ்தாபனம், மண்டப பூஜை, வேதிகார்ச்சனை, முதற்கால யாக பூஜை, மூல மந்திர யாகம் நடக்கிறது. இரவில் எண்வகை மருந்து சாத்துதல் நிகழ்வு நடக்கிறது.நாளை(11ம் தேதி) காலை, 7:30 மணிக்கு வேதிகார்ச்சனை, வேத பாராயணம், திருமுறை பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு சுவாமிகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. சிறப்பு அபிேஷகத்துடன் சுவாமிக்கு அலங்காரம் நடக்கிறது.