/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முருங்கப்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் கோவிலுக்கு ஜூன் 6ல் கும்பாபிேஷகம்
/
முருங்கப்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் கோவிலுக்கு ஜூன் 6ல் கும்பாபிேஷகம்
முருங்கப்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் கோவிலுக்கு ஜூன் 6ல் கும்பாபிேஷகம்
முருங்கப்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் கோவிலுக்கு ஜூன் 6ல் கும்பாபிேஷகம்
ADDED : மே 29, 2025 12:52 AM
திருப்பூர்,; திருப்பூர், குமார் நகர், முருங்கப்பாளையம் - இந்திரா நகரில், சித்தி விநாயகர், ஸ்ரீமாகாளியம்மன் கோவில் உள்ளது.
கோவிலில், ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீமுருகப்பெருமான் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு புதிதாக கல்காரக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது; உற்சவர் திருமேனிகள் புதிதாகச் செய்யப்பட்டுள்ளன. கோபுரம் மற்றும் முன் மண்டபங்கள் புதுப்பொலிவு பெற்றுள்ளன.
திருப்பணிகள் நிறைவுற்று, கோவில் கும்பாபிேஷகம், வரும் ஜூன் 6ம் தேதி நடக்கிறது. கும்பாபிேஷகத்தை பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், உத்மலிங்கேஸ்வர சிவம் நடத்திவைக்கிறார்.
முன்னதாக 2ம் தேதி கும்பாபிேஷக விழா துவங்குகிறது. 3ம் தேதி மாலை 5:00 மணிக்கு குமார் நகர் கருப்பராயன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், முளைப்பாரி மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துவரப்படும்; மாலை 6:00 மணிக்கு புதிய விக்ரஹங்களுக்கு கண் திறக்கப்படும்.
4ம் தேதி காலை 10:00 மணிக்கு புனித நீர் எடுத்தல், நெருப்பு உருவாக்குதல், யாக சாலை அலங்காரம் நடைபெறும். மாலை 6:00 மணிக்கு அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், சக்தி அழைத்தல், முதல் கால யாக பூஜை நடைபெறும். 5ம் தேதி காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை துவங்கும்; காலை 11:00 மணிக்கு யந்திர ஸ்தாபனம், மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடைபெறும். 6ம் தேதி காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, காலை 7:45க்கு கலசங்கள் புறப்பாடு, காலை 8:00 மணிக்கு மேல் 8:30க்குள் கோபுர விமான மஹா கும்பாபிேஷகம், மூலவர், ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீமாகாளியம்மன் மஹா கும்பாபிேஷகம் நடைபெறும். அன்னதானம் வழங்கபபடுகிறது.
கும்பாபிேஷக ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

