/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செல்வகணபதி கோவிலுக்கு நாளை கும்பாபிேஷகம்
/
செல்வகணபதி கோவிலுக்கு நாளை கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 15, 2025 04:06 AM

திருப்பூர்: திருப்பூர், காலேஜ் ரோடு, திரு.வி.க., நகர், எல்.ஐ.சி., காலனி மற்றும் கே.ஆர்.இ., லே அவுட் பகுதிகளுக்கு உரிய செல்வகணபதி கோவிலில் நாளை (16ம் தேதி) கும்பாபிேஷகம் நடைபெறவுள்ளது.
நேற்று அதிகாலை, விக்னேஷ்வர பூஜையும், தொடர்ந்து மகா கணபதி யாகம், மகாலட்சுமி ேஹாமம் மற்றும் நவக்கிரக ேஹாமங்கள் நடந்தது. அதன் பின் நேற்று மாலை, கோபுர கலசம், முளைப்பாலிகை, தீர்த்தக்குடம் ஆகியன மரக்கடை பகுதியிலிருந்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. வாஸ்து சாந்தி மற்றும் காப்புக்கட்டு ஆகியன நடந்தன. வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடந்தது.
இன்று (15ம் தேதி) கோபுர கலச ஸ்தாபனம், முதல் காலயாக சாலை பூஜைகளும், எந்திர ஸ்தாபனம், மூலவர் பிரதிஷ்டை ஆகியனவும் நடைபெறும். நாளை (16ம் தேதி) காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜைகளைத் தொடர்ந்து 9:30 மணிக்கு கோவில் கும்பாபிேஷகம் நடைபெறவுள்ளது.
ஏற்பாடுகளை விழாக்குழுவினர், குடியிருப்போர் நலச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.