/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வினை தீர்க்கும் விநாயகருக்கு வரும் 21ல் கும்பாபிேஷகம்
/
வினை தீர்க்கும் விநாயகருக்கு வரும் 21ல் கும்பாபிேஷகம்
வினை தீர்க்கும் விநாயகருக்கு வரும் 21ல் கும்பாபிேஷகம்
வினை தீர்க்கும் விநாயகருக்கு வரும் 21ல் கும்பாபிேஷகம்
ADDED : ஆக 05, 2025 11:31 PM
உடுமலை; உடுமலை வ.உ.சி., வீதியில், அரசு மருத்துவமனை அருகிலுள்ள, ஸ்ரீ வினை தீர்க்கும் விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் வரும் 21ம் தேதி நடக்கிறது.
விழா வரும் 20ம் தேதி காலை, 9:00 மணிக்கு, மங்கள இசை, ஸ்ரீ விநாயகர் வழிபாட்டுடன் துவங்குகிறது. தொடர்ந்து புண்யாகவாசனம், ஸ்ரீ கணபதி ஆவாஹணம், நவக்கிரக வழிபாடு, ஸ்ரீ மகாலட்சுமி வழிபாடு, அக்னி கார்யம் நடக்கிறது.
மாலை, 5:30 மணிக்கு, காப்பு கட்டுதல், கலச ஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை துவங்குகிறது.
வரும் 21ம் தேதி காலை, 5:30 மணிக்கு மேல், 7:50 மணிக்குள் யாத்ரா தானம், கடம் புறப்பாடும், காலை, 7:50 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் ஸ்ரீ வினை தீர்க்கும் விநாயகருக்கு, மகா கும்பாபிேஷகம், மகா அபிேஷகம், மகா தீபாராதனை நடக்கிறது.
காலை, 9:00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில், பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.