/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்; விழாக்கோலம் பூண்ட முத்தணம்பாளையம்
/
ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்; விழாக்கோலம் பூண்ட முத்தணம்பாளையம்
ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்; விழாக்கோலம் பூண்ட முத்தணம்பாளையம்
ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்; விழாக்கோலம் பூண்ட முத்தணம்பாளையம்
ADDED : ஜூன் 05, 2025 01:41 AM

திருப்பூர்; முத்தணம்பாளையம் ஸ்ரீஅங்காளம்மன் கோவிலில், நாளை காலை கும்பாபிேஷகம் கோலாகலமாக நடைபெற உள்ளது.
திருப்பூர் முத்தணம்பாளையம் ஸ்ரீஅங்காளம்மன், மேல்மலையனுார் அம்மனைப் போன்றே, பிரகாசமான முகத்தில் அருட்பார்வையும், விரித்த சடையும், ஜ்வாலா கிரீடமும் அணிந்து அருள்பாலிக்கிறாள். வலது மேல் கையில் டமருகம், கீழ்க்கரத்தில் கபாலம், இடது மேல் கரத்தில் கத்தி, கீழ்க்கரத்தில் சம்ஹார சூலமும் ஏந்தி காட்சியளிக்கிறாள்.
காதில் மகர, பத்ர குண்டலங்கள், இடது காலை மடக்கி ஆசனமிட்டும், வலது காலை இருகரம் குவித்தபடி இருக்கும் வள்ளாலன் தலை மீது வைத்தபடியும் அருளாட்சி செய்து வருகிறாள் அங்காளம்மன். அம்மனின் வலதுபுறம் புற்றுக்கண் உள்ளது.
காலத்தால் அளவிட முடியாத அங்காளம்மன் கோவிலில், கும்பாபிேஷகத்துக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கின்றன.
கருவறை விமானத்துக்கு தங்க கலசம்
அம்மன் கருவறை விமானத்துக்கு இன்று காலை தங்ககலசம் பொருத்தப்படுகிறது. மற்ற கோபுரங்களுக்கும், இன்று கலசம் பொருத்தப்படுகிறது.
நாளை காலை, ஆறாம் கால வேள்வி பூஜைகள் முடிந்து, மஹா கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. காலை, 5:30 மணிக்கு, ராஜகோபுரம் மற்றும் கோபுர கலசங்களுக்கும், 6:00 மணிக்கு அங்காளம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. பக்தர்களுக்கு அன்னதானமும், 48 நாட்களுக்கு மண்டல பூஜையும் நடைபெற உள்ளதாக, விழாக் குழுவினர் தெரிவித்தனர்.