ADDED : ஜன 01, 2024 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்;அழகு வள்ளி கும்மியாட்ட குழுவினரின் 19வது கும்மியாட்ட அரங்கேற்றம் திருப்பூர் அடுத்த கணக்கம் பாளையத்தில் நடைபெற்றது.
இதில் நாட்டுப்புற பாடல்களுக்கேற்ப 300க்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர், சிறுமியர் ஒரே வண்ணத்திலான உடை அணிந்து நடனம் ஆடினர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், சிறுவர், சிறுமியர்களுடன் இணைந்து நடனம் ஆடினார். மாவட்ட கவுன்சிலர் சாமிநாதன், கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.