ADDED : அக் 13, 2024 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை மற்றும் அழகு வள்ளி கலைக்குழு ஆகியவை சார்பில், உலக சாதனைக்கான கும்மியாட்ட நிகழ்ச்சி வரும் 19ம் தேதி மாலை 4:00 மணிக்கு, திருப்பூர் பி.என்., ரோடு, கணக்கம்பாளையம் ஊராட்சி, வாஷிங்டன் நகரில் நடக்கிறது; நிகழ்ச்சி 7:00 மணி நேரம், 7 நிமிடம், 7 வினாடிகள் நடைபெறும்.
குழந்தைகள் உள்பட 500 பெண்கள் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர் செல்வராஜ், செயலாளர் குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.