/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குமுதா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கலக்கல்
/
குமுதா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கலக்கல்
ADDED : மே 20, 2025 12:39 AM

திருப்பூர்; நம்பியூரில் உள்ள குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அசத்தியுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொது தேர்வில், இப்பள்ளி மாணவர், பிரணவ், 493 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தார்.
மூன்று பேர் சமூக அறிவியலிலும், அறிவியலில் ஒருவரும் சென்டம் பெற்றனர். அனைத்து மாணவர்களும், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர். 74 மாணவர்களில், 20 மாணவர்கள், 450 மதிப்பெண்களுக்கு மேலும், 47 மாணவர்கள், 400 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சாதித்த மாணவர்களை, பள்ளி தாளாளர் ஜனகரத்தினம் பாராட்டி பரிசு வழங்கினார். துணை தாளாளர் சுகந்தி, பள்ளி செயலர் டாக்டர் அரவிந்தன், இணை செயலர் டாக்டர் மாலினி, விளையாட்டு இயக்குநர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உட்பட பலர் பாராட்டினர்.