/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தமிழக அணியில் இடம்பெற்ற குமுதா பள்ளி மாணவர்கள்
/
தமிழக அணியில் இடம்பெற்ற குமுதா பள்ளி மாணவர்கள்
ADDED : நவ 09, 2025 11:55 PM

திருப்பூர்: இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய அளவிலான கையுந்து பந்து போட்டியில் 17 வயது ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தமிழக அணியில் பங்கேற்பதற்கான தேர்வு போட்டி திருச்சியில் நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழக அணிக்காக 17 வயது ஆண்கள் பிரிவில் குமுதா பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவன் சந்தோஷ்; பெண்கள் பிரிவில் 12ம் வகுப்பு மாணவிகள் யோகி ஸ்ரீ மற்றும் ரித்திகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், இம்மாதம் உ.பி., மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளனர்.
l அதேபோல், 19 வயது ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளுக்கான தேர்வு போட்டி புதுக்கோட்டை மற்றும் திருவண்ணாமலையில் நடைபெற்றது.
இதில் 19 வயது ஆண்கள் பிரிவில் குமுதா பள்ளி 12-ம் வகுப்பு மாணவன் முகமது ரபி; பெண்கள் பிரிவில் 12-ம் வகுப்பு மாணவி ப்ரீத்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ம.பி., மாநிலத்தில் நடைபெறும் போட்டியில், தமிழக அணிக்காக இவர்கள் விளையாடவுள்ளனர்.
மாணவர்களை மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கேசவகுமார், பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணைத் தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலர் அரவிந்தன், இணைச் செயலர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா உள்ளிட்டோர் பாராட்டினர்.

