ADDED : செப் 22, 2024 04:26 AM
திருப்பூர் : திருப்பூர் மாநகரில், நான்கு பேரை குண்டாசில் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், காங்கயம் ரோடு, விஜயாபுரம் பிரிவை சேர்ந்தவர் மாதவன், 27; பனியன் தொழிலாளி. அப்பகுதியை சேர்ந்த பிரகாஷ், 42 என்பவரிடம் வீடு போக்கியத்துக்காக கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட போது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மாதவனை, பிரகாஷ் தாக்கினார். இதுகுறித்து புகாரின் பேரில், நல்லுார் போலீசார் பிரகாைஷ போலீசார் கைது செய்தனர். இவர் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட காரணத்தால் குண்டாசில் அடைத்த திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவிட்டார். தொடர்ந்து, அவரை குண்டாசில் கைது செய்தனர்.
n திருப்பூர், பெருமாநல்லுார் அருகே கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரன், 23. இவர் தனது தோழியின் போட்டோவை மொபைல் போனில் பதிவு செய்து வைத்திருந்தார்.
இவருக்கு தெரியாமல், நண்பர்கள் போட்டோவை பகிர்ந்து கொண்டு, பணம் கேட்டு மிரட்டினர். இதுதொடர்பாக எழுந்த பிரச்னையில், புவனேஸ்வரன் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில், பத்துக்கும் மேற்பட்டோரை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சூர்யமூர்த்தி, 27, உதயதர்ஷன், 24 மற்றும் ருத்திரமூர்த்தி, 24 என, மூன்று பேரை குண்டாசில் கைது செய்ய கமிஷனர் உத்தரவிட்டார். மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.இதுவரை மாநகரில், 83 பேர் குண்டாசில் கைது செய்யப்பட்டனர்.