sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்ரீராமர் வனவாசம் செல்ல காரணமான கூனி; சாமானியன் தானே என்று சங்கடம் செய்யக்கூடாது

/

ஸ்ரீராமர் வனவாசம் செல்ல காரணமான கூனி; சாமானியன் தானே என்று சங்கடம் செய்யக்கூடாது

ஸ்ரீராமர் வனவாசம் செல்ல காரணமான கூனி; சாமானியன் தானே என்று சங்கடம் செய்யக்கூடாது

ஸ்ரீராமர் வனவாசம் செல்ல காரணமான கூனி; சாமானியன் தானே என்று சங்கடம் செய்யக்கூடாது


ADDED : ஆக 04, 2024 05:20 AM

Google News

ADDED : ஆக 04, 2024 05:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூரில் நடந்த கம்பன் விழாவில் பங்கேற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசுப்பிரமணியம், சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அவர் பகிர்ந்தவை: கடந்த, 1979ம் ஆண்டு, அப்போதைய கவர்னர் அலுவலகத்தில் இருந்து தாசில்தாருக்கு ஒரு போன் வருகிறது. கவர்னருக்கு வேண்டிய ஒரு குடும்பத்தை சேர்ந்த நபருக்கு, மதம் மாறி திருமணம் செய்த சான்றிதழ் தேவை என்று கேட்டுள்ளனர். தாசில்தார் உத்தரவுப்படி, வருவாய் ஆய்வாளரை, கவர்னர் மாளிகைப்பணியாளர் வந்து, சான்றிதழ் தேவைப்படும் நபரின் வீட்டுக்கு அழைத்து செல்கிறார். அந்த நபரும், அந்த வீட்டில் உள்ளவர்களும் தன்னை மதிக்காமல் அவமரியாதை செய்துவிட்டதாக, வருவாய் ஆய்வாளர் வருத்தமடைந்துள்ளார்.

பின்னர், வருவாய் ஆய்வாளர் தாசில்தாருக்கு அளித்த அறிக்கையை பார்த்து, கலெக்டர் அலறினார்; தாசில்தார் பதறினார். காரணம், சான்றிதழ் வழங்க இயலாது என்றே அறிக்கை அளித்துவிட்டார். ஒரு மதத்தை சேர்ந்த ஆண்; மற்றொரு மதத்துக்கு மாறிய பின்பே, அந்த மதத்தை சேர்ந்த பெண்ணை மணந்துள்ளார். திருமணத்துக்கு முன்பே மதம் மாறிவிட்டதால் இதுதொடர்பான சான்றிதழ் வழங்க இயலாது என்று கூறிவிட்டார்.

கவர்னருக்கு சரிசமமாக பேசும் அதிகாரம் கொண்ட ஒரு நபரை, வருவாய்த்துறையை சேர்ந்த ஒருவர் அடித்தளத்தையே ஆட்டிப்பார்த்து விட்டார். சாதாரணமானவர் என்று இகழ்வது தவறானது. இதையே தான், ராமாயணத்திலும் ராமர் கூறுகிறார்.

ஸ்ரீராமபிரான், சுக்ரீவனிடம், ''அரண்மனையில் இருந்த பணிப்பெண் கூனியை, சாதாரணமான பணிப்பெண் தானே என்று தான், சிறுவனாக இருந்த போது, மண் உருண்டையை அவள் மீது வீசி விளையாடினேன். அவள், எனக்கு அந்த மண்ணே இல்லாமல் வனவாசம் வரும்படி செய்துவிட்டார். சாதாரண வேலைக்காரர் தானே என்று யாரையும் நினைத்துவிடக்கூடாது'' என்றார்.

நீதிபதியின் உரை, பார்வையாளர்களை பக்குவப்படுத்தி அமர வைத்திருந்தது!






      Dinamalar
      Follow us