/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுவள கலைத்திருவிழா போட்டிகள் துவங்கின
/
குறுவள கலைத்திருவிழா போட்டிகள் துவங்கின
ADDED : அக் 25, 2024 10:47 PM
திருப்பூர்: பள்ளி அளவில் கலைத்திருவிழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கான குறுவள கலைத்திருவிழா போட்டிகள் நேற்று துவங்கியது.
திருப்பூர் வடக்கு கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட, சின்னச்சாமி அம்மாள், பூலுவப்பட்டி, நெசவாளர்காலனி ஆகிய மாநகராட்சி பள்ளிகள், பெருமாநல்லுார், பாண்டியன் நகர், குமார் நகர் ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளியில், குறுவள அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நேற்று நடந்தது.
வடக்கு வட்டாரத்துக்கு உட்பட்ட, 13 குறுமையங்களில் இருந்து, 1,400 மாணவ, மாணவியர் பாடல் ஒப்புவித்தல், கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்றனர்.
திருப்பூர் வடக்கு குறு வள வட்டார மேற்பார்வையாளர், செந்தாமரைக் கண்ணன் போட்டிகளை ஒருங்கிணைத்தார். தெற்கு வட்டாரத்துக்கான போட்டிகள் கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று, தங்களது திறன்களை வெளிப்படுத்தினர்.