/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளர் நல சட்ட பயிற்சி முகாம் துவக்கம்
/
தொழிலாளர் நல சட்ட பயிற்சி முகாம் துவக்கம்
ADDED : ஜூன் 12, 2025 06:38 AM

திருப்பூர், : தொழிலாளர் நல விழிப்புணர்வு சட்டங்கள் தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கு, 'சைமா' அலுவலக கூட்டரங்கில், நேற்று துவங்கியது.
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் சார்பில், தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு நல சட்டங்கள் குறித்த பயிற்சி முகாம், திருப்பூர், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க(சைமா) அலுவலகத்தில், துவங்கியது.
'சைமா' துணை தலைவர் பாலச்சந்தர் தலைமையில் நடந்த கருத்தரங்கில், திருப்பூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சபீனா, 'தொழிற்சாலைகள் சட்டம் 1948' என்ற தலைப்பில் பேசினார். தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்கள் கல்வி நிலைய இணை இயக்குனர் கவிதா வரவேற்றார்.
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குனர் சரவணன், துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் பேசினர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, பல்வேறு வகையான தொழிற்சாலைகளை சேர்ந்த, 140 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கருத்தரங்கில், தொழிற்சாலைகள் சட்டம் -1948 மற்றும் பிற சட்டப்பிரிவுகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.
மேலும், சட்ட பணியாள் இழப்பீட்டு சட்டம், நிலையாணைகள் சட்டம், தமிழ்நாடு வாழ்வாதார உதவித்தொகை சட்டம், தொழிற்சங்க சட்டம், பணியாளர்கள் இழப்பீட்டு சட்டம், பணிக்கொடை சட்டம், பணியாளர் மாநில காப்பீட்டு சட்டம் மற்றும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி சட்டம் குறித்தும், சட்ட அமலாக்கம் குறித்தும் விளக்கப்பட உள்ளது. கருத்தரங்கு இன்று மாலையுடன் நிறைவடைகிறது.