ADDED : பிப் 16, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., தனியார் மோட்டார் தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம் திருப்பூர் சங்க அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் சசிகுமார், தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட தலைவர் மோகன், பொது செயலாளர் நடராஜன் ஆகியோர் பேசினர். வரும் 18-ல் மதுரையில் நடைபெறும் மோட்டார் சங்க மாநில மாநாட்டில் பிரதிநிதிகள் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.