/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை
/
சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை
ADDED : பிப் 05, 2025 11:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை ஸ்ரீ சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் ஏகத்தின லட்சார்ச்சனை நடந்தது.
உடுமலை நெல்லுக்கடை வீதியிலுள்ள, ஸ்ரீ சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஏகத்தின லட்சார்ச்சனை நேற்றுமுன்தினம் நடந்தது.
காலை, 8:00 மணிக்கு, நித்திய திருவாராதனம் பூஜையுடன் துவங்கி, ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம லட்சார்ச்சனை நடந்தது. 11:30 மணிக்கு பஞ்சோபநிஷத் மூலமந்திர ஹோமம், அதனை தொடர்ந்து, எம்பெருமாளுக்கு, மகா திருமஞ்சன அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, மாலை, 4:30 மணி முதல், 8:00 மணி வரை, லட்சார்ச்சனையும், இரவு, 8:30க்கு, மகா தீபாராதனை, சர்வ தரிசனம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.