/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீசத்யசாய் மையத்தில் திருவிளக்கு வழிபாடு
/
ஸ்ரீசத்யசாய் மையத்தில் திருவிளக்கு வழிபாடு
ADDED : ஜூலை 25, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; தமிழ்நாடு ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில், அனைத்து சாய் மையங்களிலும், ஆடிமாத திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது.
அவ்வகையில், திருப்பூர் பி.என்., ரோட்டிலுள்ள ஸ்ரீசத்ய சாய் ஆன்மிக மையத்தில், திருவிளக்கு பூஜை கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இந்த ஆன்மிக வழிபாட்டில், அப்பகுதியை சேர்ந்த நுாற்றுக்கும் அதிகமான பெண்கள் பங்கேற்று, திருவிளக்கு பூஜை நடத்தி, சத்ய சாய் வழிபாடு செய்தனர்.
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக, திருவிளக்கு வழிபாட்டின் சிறப்புகள் குறித்து, திருப்பூர் மாவட்ட தலைவர் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து மங்கல ஆரத்தி நடந்து, பக்தர்கள் கூட்டு வழிபாடு நடத்தினர்.