/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல கோடி ரூபாய் மதிப்பு நிலம் ஐகோர்ட் உத்தரவால் தப்பியது
/
பல கோடி ரூபாய் மதிப்பு நிலம் ஐகோர்ட் உத்தரவால் தப்பியது
பல கோடி ரூபாய் மதிப்பு நிலம் ஐகோர்ட் உத்தரவால் தப்பியது
பல கோடி ரூபாய் மதிப்பு நிலம் ஐகோர்ட் உத்தரவால் தப்பியது
ADDED : செப் 25, 2024 12:20 AM

பல்லடம் : பல்லடம் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஊராட்சிக்கு சொந்தமான நிலம், சென்னை ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்து மீட்கப்பட்டது.
பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சி, மின் நகரில், ஊராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூட நிலம் உள்ளது. இந்நிலத்துக்கு தனிநபர் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வலியுறுத்தி அண்ணா நகரை சேர்ந்த நாகூர் மீரான் என்பவர் ஆர்.டிஓ.,விடம் புகார் மனு அளித்திருந்தார். இதன் நடவடிக்கையாக, தற்போது ஊராட்சிக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அவர் கூறியதாவது:
கடந்த, 2005ல், சமுதாய நலக்கூட நிலம், தனிநபர் பெயரில் முறைகேடாக பட்டா பெறப்பட்டு, அந்நிலத்தை விற்பனை செய்ய முயற்சி செய்தனர். நில அளவை துறையுடன் இணைந்து உட்பிரிவு பட்டா பெறப்பட்டு, டி.டி.சி.பி., அனுமதியும் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக, வருவாய்த்துறை, நில அளவை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த நடவடிக்கைக்கு எதிராக, ஊராட்சி மூலம் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்த நிலையில், 2005ம் ஆண்டு ஊராட்சி மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து கோர்ட் உத்தரவிட்டது.
மேலும், கோர்ட் உத்தரவை பின்பற்றி, நிலத்தை மீட்க மாவட்ட நிர்வாகமும் உத்தரவிட்டது. இதனால், பலகோடி ரூபாய் மதிப்பிலான ஊராட்சி நிலம் மீட்கப்பட்டு, கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நாகூர் மீரான் கூறினார்.