/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சவுக்கு மரங்களால் பசுமையாகும் நிலங்கள்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் நடவு
/
சவுக்கு மரங்களால் பசுமையாகும் நிலங்கள்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் நடவு
சவுக்கு மரங்களால் பசுமையாகும் நிலங்கள்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் நடவு
சவுக்கு மரங்களால் பசுமையாகும் நிலங்கள்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் நடவு
ADDED : ஜூலை 13, 2025 08:36 PM

உடுமலை; வனத்துக்குள் திருப்பூர் -11 திட்டத்தின் கீழ், விவசாய நிலங்களில் சவுக்கு, பாக்கு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
வனத்துக்குள் திருப்பூர் - 11 திட்டத்தின் கீழ், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமடைந்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், துாய காற்றும், மழையும் மக்களுக்கு சொந்தம்; மரம் விவசாயிகளுக்கு சொந்தம் என்ற அடிப்படையில், விவசாய நிலங்களில், மரச்சாகுபடி திட்டமாக, இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது.
பசுமை வளர்க்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், குறைந்த நீர்த்தேவை மற்றும் பராமரிப்பு அடிப்படையில், சவுக்கு, பாக்கு மரக்கன்றுகளை விவசாயிகள் தேர்வு செய்து வருகின்றனர்.
மடத்துக்குளம் வயலுாரைச்சேர்ந்த, விவசாயி லோகநாயகிக்கு சொந்தமான நிலத்தில், 7,350 சவுக்கு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல், ஜல்லிபட்டி விவசாயி சுப்ரமணியம், விஷ்ணுக்கு சொந்தமான நிலத்தில், 720 பாக்குமரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
மைவாடி பிரிவிலுள்ள, விவசாயி மயில்சாமிக்கு சொந்தமான நிலத்தில், 3,700 சவுக்கு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. வனத்துக்குள் திருப்பூர்-11 திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், அரசுக்கு சொந்தமான நிலங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கோவில், கல்வி நிறுவன வளாகங்களில், மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது.
மரக்கன்றுகள் நடவு செய்து முறையாக பரமரித்து, மரமாக வளர்க்கும் ஆர்வம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.