ADDED : ஜன 30, 2026 07:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், மங்கலம் ரோட்டிலுள்ள குமரன் மகளிர் கலைக்கல்லுாரியில் நேற்று மூன்றாம் ஆண்டு மாணவியர் 402 பேருக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.
கல்லுாரி முதல்வர் வசந்தி வரவேற்றார். திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. செல்வராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவியருக்கு லேப்டாப் வழங்கி, சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில், மாநகராட்சி, 38வது வார்டு கவுன்சிலர் சாந்தாமணி முன்னிலை வகித்தார். குமரன் கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவியர் பங்கேற்றனர். மூன்றாமாண்டு மாணவி சுதா தேவி நன்றி கூறினார்.

