நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு கோட்டத்தில் பொறியியல் மேம்பாடு மற்றும் தண்டவாள சீரமைப்பு பணி நடக்கிறது. இதனால், சென்னையில் இருந்து மங்களூரு வரும் வெஸ்ட்கோஸ்ட் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (எண்:22637) நாளை (17ம் தேதி) 2:55க்கு பதில், ஒரு மணிநேரம், 30 நிமிடம் தாமதமாக மாலை, 4:25க்கு சென்னையில் புறப்படும்.
வரும், 24ம் தேதி, இரண்டு மணி நேரம், 45 நிமிடமும், மார்ச் 2ம் தேதி, மூன்று மணி நேரமும் தாமதமாக புறப்படும். வழக்கமான நேரத்தை விட, தாமதமாக திருப்பூர், கோவை ஸ்டேஷன்களை ரயில் கடக்கும். மங்களூருவில் இருந்து சென்னை செல்லும் ரயில் (எண்:22638) வரும் 29ம் தேதி, மார்ச் 1 மற்றும் 9ம் தேதி, நள்ளிரவு, 1:45க்கு பதிலாக, இரண்டு மணி நேரம் தாமதமாக, அதிகாலை, 3:45க்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.