/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
லட்டு, மைசூர்பாகு, அதிரசம், போளி... என்றும் தீபாவளி இனிப்பில் சிறப்பிடம்
/
லட்டு, மைசூர்பாகு, அதிரசம், போளி... என்றும் தீபாவளி இனிப்பில் சிறப்பிடம்
லட்டு, மைசூர்பாகு, அதிரசம், போளி... என்றும் தீபாவளி இனிப்பில் சிறப்பிடம்
லட்டு, மைசூர்பாகு, அதிரசம், போளி... என்றும் தீபாவளி இனிப்பில் சிறப்பிடம்
ADDED : அக் 25, 2024 10:30 PM
இனிப்பு பலகாரங்கள் இல்லாமல் தீபாவளிக் கொண்டாட்டங்கள் இருப்பதில்லை. பழமையான பலகார வகைகள்தான் என்றாலும், இன்றும் 'டிரெண்ட்'டில் இருப்பவையாக கீழ்க்கண்ட இனிப்புகள் உள்ளன.
லட்டு
தீபாவளியையொட்டி பல வகை லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு லட்டும் சிறப்பானதுதான். இந்திய வீடுகளில் லட்டுக்கு தனி இடமே உண்டு.
மைசூர்பாகு
மைசூர் பாகுக்கு என்றுமே தனி இடம் உண்டு. தங்கக் கட்டி போல அழகான வடிவங்களில் இதைப் பார்க்கும்போதே வாயில் எச்சில் ஊறும் என்பது மறைக்க முடியாத உண்மை. நாவுக்கும் இது மென்மை தரும் ஒரு அற்புதமான ஸ்வீட்.
போளி
வாளிப்பான சுவையுடன் கூடியது போளி. சர்க்கரை போளி, தேங்காய் போளி, துவரம் பருப்பு போளி என பல வகைகள் இருக்கின்றன. மங்களகரமாக இருக்கும் போளி தவிர்க்க முடியாத ஒரு இனிப்பு வகை.
அதிரசம்
அரிசி மாவு, வெல்லம், வெண்ணெய், ஏலக்காய் பொடி உள்ளட்டவற்றை கொண்டு செய்யப்படும் அதிரசம் படு தித்திப்பானது. அதிரசம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டியது பாகு தயாரிப்பில்தான். பாகு சரியாக வந்து விட்டால், அந்த அதிரசத்திற்கு இணை வேறு எதுவுமே இல்லை.
குலாப் ஜாமூன்
ரெடிமேட் குலாப் ஜாமூன் கடைகளில் நிறையவே கிடைக்கிறது. நினைத்தவுடன் செய்யக் கூடிய இனிப்பு வகையாக திகழ்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம் என தெற்காசியா முழுவதுமே பிரபலமானது குலாப்ஜாமூன்.