/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வக்கீல் கொலை விவகாரம்; 3வது நாளாக நடக்கும் பேச்சு
/
வக்கீல் கொலை விவகாரம்; 3வது நாளாக நடக்கும் பேச்சு
ADDED : ஜூலை 31, 2025 11:39 PM
திருப்பூர்; தாராபுரம், முத்து நகரை சேர்ந்தவர் முருகானந்தம் 41; மாற்றுதிறனாளி. ஐகோர்ட் வக்கில். இவருக்கும், சித்தப்பா குடும்பத்தினருக்கு இடையே பல ஆண்டுகளாக சொத்து பிரச்னை உள்ளது.
சமீபத்தில், தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே சித்தப்பாவின் தேன்மலர் மெட்ரிக் பள்ளி முறையான அனுமதியில்லாமல், விதிமுறை மீறி கட்டடம் கட்டப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டில், சம்பந்தப்பட்ட வகுப்பறைகளை இடிக்க கோர்ட் உத்தரவிட்டது. இதுதொடர்பான முன்விரோதத்தில் கடந்த, 28ம் தேதி அளவீடை பார்க்க, இரு நண்பருடன் சென்ற முருகானந்தத்தை கூலிபடையினர் வெட்டி கொன்றனர். இதில், சித்தப்பா தண்டபாணி உட்பட, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
முருகானந்தம் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், கடந்த, மூன்று நாட்களாக இன்னும் வாங்கப்படாமல் உள்ளது. போலீஸ் தரப்பில் தொடர்ந்து பேச்சு நடக்கிறது. போலீசார் கூறுவதை ஏற்க மறுத்து, வழக்கில் தண்டபாணியின் மகன், அளவீடு செய்ய வந்த சர்வேயர் பெயரை சேர்க்க வேண்டும். இவ்வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் எ ன வலியுறுத்தி, உடலை வாங்கவில்லை. மூன்றாவது நாளாக பேச்சு நடத்தியும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. கொலை தொடர்பாக, இருவரை தனிப்படை போலீசார் நாமக்கல்லில் பிடித்து விசாரித்து வருகின் றனர்.