/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வக்கீல் கொலை வழக்கு; மேலும் மூவருக்கு 'குண்டாஸ் '
/
வக்கீல் கொலை வழக்கு; மேலும் மூவருக்கு 'குண்டாஸ் '
ADDED : செப் 01, 2025 10:48 PM
திருப்பூர்; தாராபுரத்தில் ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கில் கைதான மூன்று பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாராபுரத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம், 41. சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். ஒரு நில விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக அளவீடு செய்ய வந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சிலர் கோர்ட்டில் சரணடைந்தனர். சிலரை போலீசார் தேடிப்பிடித்து கைது செய்தனர். அவ்வகையில், இக்கொலை வழக்கில் தொடர்புடைய, 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட, சதீஸ்குமார், 44, பாலமுருகன், 44 மற்றும் அண்ணாதுரை, 35 ஆகியோர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருப்பூர் எஸ்.பி. கிரிஷ் அசோக் யாதவ் பரிந்துரைத்தார்.
அதன்பேரில் கலெக்டர் மணிஷ் நாரணவரே இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதன் நகல், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று பேரிடமும் வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட தண்டபாணி, தட்சிணாமூர்த்தி மற்றும் நாட்டுத்துரை ஆகிய மூன்று பேர் மீது ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.