/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வக்கீல் கொலை; மேலும் 2 பேர் கைது
/
வக்கீல் கொலை; மேலும் 2 பேர் கைது
ADDED : ஆக 16, 2025 09:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; தாராபுரம், முத்து நகரை சேர்ந்தவர் முருகானந்தம் 41; மாற்றுத்திறனாளி. ஐகோர்ட் வக்கீல். கடந்த 28-ம் தேதி தாராபுரத்தில், இவர் கூலிப்படைக் கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். இதுதொடர்பாக அவரது சித்தப்பா தண்டபாணி உட்பட, 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலையில் தொடர்புடையை மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். கடந்த வாரம், தண்டபாணி உள்ளிட்டோரை கஸ்டடி எடுத்து விசாரித்த போது, சிலர் குறித்து போலீசாருக்கு தெரியவந்தது.
கொலை தொடர்பாக, நாமக்கல்லை சேர்ந்த குமரேசன், 31, மகேஷ், 35 என, இருவரை தாராபுரம் போலீசார் நேற்று கைது செய்தனர். தற்போது கைது செய்யப்பட்ட, இருவரும் கொலையில் முக்கியமானவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.