sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 25, 2026 ,பங்குனி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 'நீதித்துறை காலியிடம் நிரப்ப வேண்டும்' வக்கீல்கள் மாநாட்டில் வலியுறுத்தல்

/

 'நீதித்துறை காலியிடம் நிரப்ப வேண்டும்' வக்கீல்கள் மாநாட்டில் வலியுறுத்தல்

 'நீதித்துறை காலியிடம் நிரப்ப வேண்டும்' வக்கீல்கள் மாநாட்டில் வலியுறுத்தல்

 'நீதித்துறை காலியிடம் நிரப்ப வேண்டும்' வக்கீல்கள் மாநாட்டில் வலியுறுத்தல்


ADDED : டிச 21, 2025 06:05 AM

Google News

ADDED : டிச 21, 2025 06:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: நீதித்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என, திருப்பூரில் நடந்த அகில இந்திய வக்கீல்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அகில இந்திய வக்கீல்கள் சங்க திருப்பூர் மாவட்ட, ஐந்தாவது மாநாடு, வெள்ளியங்காடு சிவளா ஹாலில் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் சுப்பராயன் தலைமை வகித்தார். மாவட்டத் துணை தலைவர் கண்ணன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். வக்கீல் ஸ்ரீநிதி வரவேற்றார்.

திருப்பூர் பார் அசோசியேசன் தலைவர் பிரகாஷ், மாவட்ட கோர்ட் வக்கீல் சங்க துணை தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். சங்க மாநிலச் செயலாளர் பாண்டீஸ்வரி மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட செயலாளர் மோகன் மாநாட்டு அறிக்கை வாசித்தார். பொருளாளர் உதயசூரியன் வரவு செலவு அறிக்கை வாசித்தார்.

மாவட்ட துணை செயலாளர்கள் சேகர், நவீன், மாநிலக்குழு உறுப்பினர் தமயந்தி, மாவட்ட குழு உறுப்பினர் ஆனந்தன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். இதில், இ - பைலிங் முறைக்கு உரிய முன்னேற்பாடு இன்றி, நடைமுறைப்படுத்துவதை கைவிட வேண்டும்; ஏற்கனவே உள்ள நடைமுறையை அனுமதிக்க வேண்டும். பெண் வக்கீல்கள் பேறு கால உதவித் தொகை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

திருப்பூர் மாவட்ட கோர்ட் வளாகம் முன், போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்துகளை தவிர்க்க போக்குவரத்து சிக்னல், போக்குவரத்து போலீஸ் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில பொதுச்செயலாளர் சிவகுமார் நிறைவுரை நிகழ்த்தினார்.

புதிய நிர்வாகிகள் இம்மாநாட்டில் சங்க மாவட்ட தலைவராக மோகன், செயலாளர் - மணவாளன்; பொருளாளர் - உதயசூரியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், துணைத்தலைவர்களாக கண்ணன், பொன்ராம், தமயந்தி; இணை செயலாளர்களாக கோபால கிருஷ்ணன், வினோத்குமார், அமர்நாத் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us