ADDED : பிப் 10, 2025 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; வக்கீல் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த கோரி, வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.பல்வேறு பகுதிகளிலும் பல காரணங்களால் வக்கீல்கள் மீது தாக்குதல், கொலை முயற்சி மற்றும் கொலை போன்ற சம்பவங்கள் சகஜமாக நடந்து வருகிறது.இவற்றை கண்டித்தும், வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த கோரியும், தமிழகம் மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதை வலியுறுத்தும் வகையில் நேற்று வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட் வளாக கோர்ட்கள், தாலுகா கோர்ட்களில் நேற்று கோர்ட் நடவடிக்கையில் பங்கேற்காமல்வக்கீல்கள் புறக்கணிப்பு செய்தனர். இருப்பினும்நீதிபதிகள், அரசு வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள்வழக்கம் போல் பணியாற்றினர்.

