/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் கம்பத்தில் விளம்பரத் தட்டி சட்ட ரீதியான நடவடிக்கை பாயும்
/
மின் கம்பத்தில் விளம்பரத் தட்டி சட்ட ரீதியான நடவடிக்கை பாயும்
மின் கம்பத்தில் விளம்பரத் தட்டி சட்ட ரீதியான நடவடிக்கை பாயும்
மின் கம்பத்தில் விளம்பரத் தட்டி சட்ட ரீதியான நடவடிக்கை பாயும்
ADDED : அக் 10, 2025 01:03 AM

திருப்பூர்; ''மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளில், விளம்பரத்தட்டிகள், அனுமதியற்ற கேபிள்கள் எதுவும் கட்டக்கூடாது; இவற்றை அகற்றாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை பாயும்'' என்று மின் வாரியம் எச்சரித்துள்ளது.
திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை:
திருப்பூர் மின் கோட்டத்தின் கீழ் உள்ள பகுதிகளில் பொது மக்களுக்கு மின் சப்ளை செய்யும் வகையில், உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்கம்பங்களும், மின்மாற்றிகளும் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
இவற்றில் துறை சார்ந்த பணியாளர்களுக்கு மட்டுமே பராமரிப்பு பணி நிமித்தமாக, அதில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வேறு தனியார் நிறுவன ஊழியர்கள், தனி நபர்கள் ஏறினால் அது தண்டனைக்குரிய குற்றம்.
மின்கம்பங்களில் தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் சிலர் சட்டவிரோதமாக ஏறி அவற்றில் தங்கள் நிறுவன விளம்பர பதாகைகள் பொருத்துவது, கேபிள் ஒயர்கள் கட்டிக் கொண்டு செல்வது போன்ற செயல்களை செய்துள்ளனர்.
இதுபோன்ற செயல்கள் மின் ஊழியர்கள் மின் கம்பத்தில் ஏறி பணி செய்வதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இதனால், ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் விபத்து மற்றும் விலைமதிப்பற்ற உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. திருப்பூர் கோட்டத்துக்குட்பட்ட மின்கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றில் சட்டத்திற்கு புறம்பாக விளம்பர தட்டிகள், அனுமதியற்ற கேபிள்கள் எதுவும் கட்டக்கூடாது.
ஏற்கனவே கட்டியுள்ள விளம்பர பதாகை மற்றும் கேபிள் ஒயர்களை மின் ஊழியர்களின் துணையோடு உடனடியாக அகற்ற வேண்டும். தவறினால், சட்டரீதியாக துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.