/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிமங்கலம் கிராமங்களில் சட்ட விழிப்புணர்வு முகாம்
/
குடிமங்கலம் கிராமங்களில் சட்ட விழிப்புணர்வு முகாம்
குடிமங்கலம் கிராமங்களில் சட்ட விழிப்புணர்வு முகாம்
குடிமங்கலம் கிராமங்களில் சட்ட விழிப்புணர்வு முகாம்
ADDED : அக் 08, 2024 11:43 PM

உடுமலை : குடிமங்கலம் போலீஸ் சார்பில், கிராமங்களில், சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
குடிமங்கலம், பூளவாடி, பெதப்பம்பட்டி உள்ளிட்ட இடங்களில், குடிமங்கலம் போலீசார் சார்பில், சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் கீதா தலைமை வகித்தார். உடுமலை டி.எஸ்.பி., ஆறுமுகம் முன்னிலை வகித்தார். அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி சட்ட விழிப்புணர்வு குறித்து கலந்துரையாடினார்.
பெண்கள் மொபைல்போன்களை அதிக நேரம் பயன்படுத்தி வீடியோ கால் பேசுவதை தவிர்க்க வேண்டும்; வங்கியில் இருந்து அழைப்பதாக தெரிவித்து, 'ஓடிபி' கேட்பார்கள்; அதை கூற வேண்டாம்.
குழந்தை திருமணம்; பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து, 1098, 1100 எண்களில் புகார் தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கிராம மக்கள், பல்வேறு சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.