ADDED : ஜன 25, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : மாநில, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, விழுதுகள் தன்னார்வ அமைப்பு சார்பில், சட்ட விழிப்புணர்வு முகாம், முருகம்பாளையத்தில் நேற்று நடந்தது. விழுதுகள் திட்ட மேலாளர் சந்திரா வரவேற்றார். முருகம்பாளையம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுசீலா தலைமை வகித்தார்.
சட்ட உதவி மைய வக்கீல்கள் சாய்பரத், அமுதா ஆகியோர் சட்ட உதவி மைய செயல்பாடுகள், பொது இடங்களில் பெண்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து அறிவுரை வழங்கினர். விழுதுகள் இயக்குனர் தங்கவேல், கள ஒருங்கிணைப்பாளர் சுதா உள்ளிட்டோர் பேசினர். திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.