ADDED : பிப் 11, 2026 06:21 AM
அ நிறம் | அளவு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறியதாவது:
கல்குவாரியை சுற்றிலும், டிடிசிபி அப்ரூவ்டு சைட் மற்றும் வீடு உள்ளது. இந்த கல்குவாரிக்கு அனுமதி கொடுக்க சட்டத்தில் இடம் இல்லை. 300 மீட்டர் இடைவெளிக்குள் மின் கோபுரம் உள்ளது. இதனால், அனுமதி கொடுக்க முடியாது. அருகில் கண்டிஷன் பட்டா நிலம் உள்ளது. இதனை ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மட்டுமே கொடுக்க முடியும். சட்ட விரோதமாக வெடிமருந்து வாங்குகிறார்கள். ரோட்டில் பத்து டன் மட்டுமே லாரியில் கொண்டு செல்ல வேண்டும். குவாரியில் வேலை செய்யும் தொழிலாளிக்கு பாதுகாப்பு இல்லை. அனுமதி கேட்கும் பொழுது ஓடையை பற்றி கூறவே இல்லை. 50 அடி துாரத்தில் பெரிய ஓடையும் உள்ளது. இதனால் அனுமதி கொடுப்பது சட்டப்படி தவறு.
